முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு: அணையில் இருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளில் 4 மதகுகள் வழியாக மட்டுமே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு தற்போது வினாடிக்கு சராசரியாக 7ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு அதிக அளவு நீர் வெளியேற்றியும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ரூல் கர்வ் அட்டவணையின் படி கேரளாவிற்குள் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் வினாடிக்கு 1,000 கன அடியாக உயர்த்தப்படும். ரூல் கர்வ் முறைப்படி ஆகஸ்ட் 20ம் தேதி 138.4 அடியாகவும், ஆகஸ்ட் 31ம் தேதி 139.80அடியாகவும் உயர்த்த முடியும். செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு தான் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: