×

கச்சிராயபாளையம் அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய பூங்கார் ரக நெல் நடவு -துணை இயக்குநர், வேளாண் மாணவிகள் பங்கேற்பு

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எல்லையில் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அரசு விதைப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் பாரம்பரிய மற்றும் புதிய நெல் ரகங்களை செயற்கை வளங்களை பயன்படுத்தாமல், இயற்கை வளமான எருக்களை பயன்படுத்தி நடவு செய்து விதைந்த நெல்லை விதை நேர்த்தி செய்து வேளாண் கிடங்குமூலம் விற்பணை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா, சிவன் சம்பா, கருப்பு கவுனி  ரக நெல்லை இந்த பண்ணையில் நடவு செய்தனர். மேலும் தமிழக அரசும் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.

இதையொட்டி இந்த ஆண்டு கச்சிராயபாளையம் அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார் நெல் ரகத்தை சுமார் 4.71 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட துணை இயக்குநர் சுந்தரம் தலைமையில் கச்சிராயபாளையம் பண்ணை நிர்வாக அலுவலர் ஆனந்தன், மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு நடவு பணியை துவக்கி வைத்தனர்.

இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும்போது விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவதடன், மண் வளத்தையும் பாதுகாக்கலாம். இந்த பண்ணையில் இயற்கை முறையில் சாகுபடி செய்து விதைசான்று நடைமுறையின்படி உற்பத்தி செய்து வேளாண் விரிவாக்க மையங்கள்மூலம் விவசாயிகளுக்கு இந்த நெல் ரகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தூயமல்லி, செங்கல்பட்டு திருமனி ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்பட உள்ளதாகவும் துணை இயக்குநர் சுந்தரம் தெரிவித்தார்.

Tags : Kachirayapalayam ,Govt Seed Farm ,Deputy , Chinnasalem: There is a government seed farm covering an area of about 47 acres on the border of Kachirayapalayam in Kallakurichi district.
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...