×

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

சென்னை : வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 7,8,மற்றும் 8ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20 செ.மீ. மழை பதிவாகியது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

06.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Nilgiri ,Meteorological Department , Coimbatore, Nilgiris, very heavy rain, Meteorological Centre
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்