கோவையில் சின்ன வெங்காய செடிகளை தாக்கும் பூஞ்சை நோய்: விவசாயிகள் வேதனை...

கோவை : கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி அறுவடைக்கு தயாரான நிலையில் பூஞ்சை நோய் தாக்குதலால் விவசாயிகள் விழி பிதுங்கியுள்ளனர். கோவை தொண்டாமுத்தூரில் நடப்பாண்டில் 18,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெங்காயம் நடவு செய்திருந்தனர். கடந்த அறுவடையின் போது வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் குறைவான பரப்பிலேயே சகுபடி செய்தனர். இந்நிலையில் வெங்காயம் திரண்டு அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் பெரும்பாலான நிலங்களில் பூஞ்சை நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது.

இதனால், வெங்காயத் தண்டுகள் மஞ்சள் நிறத்தில் மாறி இருக்கின்றன. வேரும் அழுகல் விட ஆரம்பித்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். முந்தைய சாகு படியில் அதிக விளைச்சலால் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால், இம்முறை உற்பத்தியை குறைத்தால் நியாயமான விலை கிடைக்கும் என வெங்காய விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அவர்களது கணிப்பை மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் பொய்யாகியுள்ளது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து மருந்து தெளிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: