முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக அதிகரித்துள்ள நிலையில், இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏற்கனவே ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில்; கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதில் இருந்தே திறக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: