கொடைக்கானலில் தொடர் மழையால் கேரட், பூண்டு விவசாயம் பாதிப்பு: பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர் மழையால் கேரட் மற்றும் வெள்ளைப்பூண்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே கனமழையானது பெய்துகொண்டு வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் பலத்த சேதத்தை சந்தித்து வருகிறது. மேலும், நேற்று பெய்த கனமழையின் காரணமாக கொடைக்கானல்- பெரியகுளம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுவதும் வழக்கமாகவே உள்ளது.

மேலும், இந்த மழையானது விவசாயத்தையும் விட்டுவைக்கவில்லை. கொடைக்கானலில் முக்கிய பயிராக பயிரிடப்பட்டிருக்கும் கேரட், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரப்பட்ட கேரட் மற்றும் பூண்டு விவசாயம் முழுவதுமாக நீரில் மூழ்கி இருப்பதால் பயிர்களை எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பூம்பாறை, கிலாவரை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைப்பூண்டு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் முழு வேதனை அடைந்திருக்கின்றனர். இதனால், தமிழக அரசு தங்களுக்கு மானியத்தை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: