நகராட்சி, பேரூராட்சிகளில் எல்லைகளுக்குள் லைசென்ஸ் இல்லாமல் மலக்கசடு கழிவுநீரை அகற்ற கூடாது; தமிழக அரசு உத்தரவு

சென்னை: நகராட்சி, பேரூராட்சிகளில் எல்லைகளுக்குள் உரிமமின்றி குடியிருப்பு, வணிக கட்டிடத்தில் மலக்கசடு, கழிவுநீரை அகற்றுதல் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசிதழில் கூறியிருப்பதாவது: வரம்புரையாக அரசின் உள்ளாட்சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வமான வாரியம் எதனினாலும், மலக்கசடு அல்லது கழிவுநீரை கொண்டு செல்லுதல், சேகரித்தல் அல்லது அகற்றுதலுக்காக அத்தகைய உரிமம் எதுவும் தேவையானதாகாது. மலக்கசடு அல்லது கழிவுநீரை சேகரித்தல் கொண்டு செல்லுதல் அல்லது அகற்றுதலுக்கு கருதும் நபரெவரும், உரிமம் வழங்குவதற்காக வகுத்துரைக்கப்படலாகும். அத்தகைய விவரங்கள், ஆவணங்கள் அடங்கிய அத்தகைய படிவத்தில் மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டணத்துடன், உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடம் விண்ணப்பித்தல் வேண்டும்.

அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு உரிமத்தை வழங்கலாம் அல்லது அதற்கான காரணத்தை பதிவு செய்து உரிமம் வழங்குவதற்கு மறுக்கலாம். வழங்கப்பட்ட உரிமமானது, அது வழங்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகள் கால அளவிற்கு செல்லுபடியாகுதல் வேண்டும். நிபந்தனைகள் மற்றும் வரைக்கட்டுகளை மீறினால் அல்லது அதனுடன் இணங்க தவறினால் அவரின் முதல் குற்றத்திற்காக 25 ஆயிரம் வரை நீடிக்கலாகும் மற்றும் இரண்டாவது அல்லது தொடர்ச்சியாக குற்றங்களுக்காக ரூ. 50,000 வரை நீட்டிக்கப்படலாகும். தண்டனை தொகையுடன் தண்டிக்கப்படுதல் வேண்டும். 2013ம் ஆண்டு கைகளால் துப்புரவு செய்யும் பணியாளர்கள் வேலையமர்த்தம் செய்வதை தடை செய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளித்தல் சட்டத்தில் தடை செய்யப்பட்டவாறான, கழிவுநீர் தொட்டில் அல்லது அமைவிட துப்புரவு அமைப்பில் அபாயகரமாக சுத்தம் செய்தலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நபரெவரும் ஈடுபடவில்லை அல்லது பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: