×

மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை; நகர்ப்புர வாழ்விட வாரிய மேலாண் இயக்குநர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில்  இருக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கூறியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் சுமைத்தாங்கி அறக்கட்டளையின் சார்பில் கல்லூரிகளில் பயிலும் 40 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. அறக்கட்டளையின் நிறுவனர்  நிர்வாக அறங்காவலர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் பங்கேற்று முதல் கட்டமாக  கல்லூரியில் பயிலும் 40 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ. 6,55,274 காசோலைகளை  வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் இருக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திறன்மேம்பாட்டினை வளர்த்திட பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் இணையதள வசதியை முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்.  நீங்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு உதவிட தமிழக அரசும், தன்னார்வு தொண்டு நிறுவனமும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Urban Habitat Board , Various measures to improve the academic quality of students; Urban Habitat Board Managing Director Speech
× RELATED மனிதநேயம் முக்கியம் என பேசிய சிறுவன்...