×

திருஷ்டி கழிப்பதாக ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை: பூசாரிக்கு அடி உதை போலீசார் விசாரணை

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சுமதி (36, பெயர் மாற்றப்பட்டுள்ளது.  இவர், தாம்பரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் பூசாரியாக இருப்பவர் சந்திரசேகர் (55). இந்த கோயிலுக்கு சுமதி தனது குடும்பத்துடன் அடிக்கடி சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். அப்போது பூசாரி சந்திரசேகர், ‘‘உங்கள் 15 வயது மகளுக்கு தோஷம் உள்ளது. உடனடியாக திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவளது வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படும்,’’என சுமதியிடம் தெரிவித்துள்ளார். இதனால், பயந்து போன சுமதி, ‘‘தோஷம் கழிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்,’’என கேட்டுள்ளார். அதற்கு பூசாரி சந்திரசேகர், ‘‘உங்கள் வீட்டில் வைத்தே தோஷம் கழிக்க வேண்டும். இதற்காக, நான் உங்கள் வீட்டில் 15 நாட்கள் தங்க வேண்டும்,’’என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய சுமதி, பூசாரியை தங்களது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், சுமதி நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றபோது, அங்கிருந்த சிலர், ‘‘பூசாரி சந்திரசேகர் ஒரு மோசடி நபர். ஏற்கனவே  ஒரு சிறுமிக்கு திருஷ்டி கழிக்கப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்,’’என்று சுமதியிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன அவர், உடனடியாக தனது வீட்டுக்கு சென்றபோது, அங்கு தனியாக இருந்த தனது மகளுக்கு பூசாரி பாலியல் தொந்தரவு கொடுத்தை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, சுமதியும், அவரது கணவரும் சேர்ந்து பூசாரி சந்திரசேகரை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் வந்து கேட்டபோது, ‘‘திருஷ்டி கழிப்பதாக கூறி எனது மகளிடம் பூசாரி தவறாக நடக்க முயன்றார்’’என்று தெரிவித்தனர். இதனால், கோபமடைந்த பொதுமக்களும் சேர்ந்து பூசாரியை சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில், அவர் காயமடைந்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமதியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், பூசாரியிடம் விசாரணை நடத்துவதற்காக மருத்துவமனைக்கு சென்றனர். இதையறிந்த பூசாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Trishti , Sexual harassment of a girl by tricking her into performing Trishti: Police investigates the kicking of the priest
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...