மணலி பஸ் நிலையம் இடமாற்றம்

திருவொற்றியூர்: மணலி பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுவதால், மாநகர பேருந்துகள் இந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

எனவே, பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக முடியும் வரை, மணலி பேருந்து நிலையம் மூடப்பட்டு, மண்டல அலுவலகம் எதிரே காமராஜர் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் தற்காலிகமாக பேருந்து நிலையம் செயல்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது.

அதன்படி, மேற்கண்ட பகுதியில் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Related Stories: