கழிவுநீர் கால்வாய் அடைப்பு குறித்து புகார்; அளிக்கலாம் குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், கழிவுநீர் கால்வாய் மற்றும் மேன்ஹோல்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் வாரம்தோறும் நடைபெறுகிறது. இதுவரை 1425 தெருக்களில் உள்ள 7345 மேன்ஹோல்களில் 1,99,329 மீட்டர் பிரதான குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

Related Stories: