தமிழகத்தில் கனமழை எதிரொலி; மீட்பு குழு தயாராக இருக்க வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பாப்புலர் ப்ரண்ட் மீட்பு, நிவாரண குழு தயாராக இருக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு  மையத்தின்  எச்சரிக்கையை கருத்தில் கொண்டு பாப்புலர் ப்ரண்ட்டின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் எப்போதும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு தேவையான மீட்பு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் தயார் செய்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  மீட்பு குழுவிற்கு அறிவுறுத்துகிறேன். மேலும், எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு பேரிடர் மேலான்மை குழுவுடன் தொடர்பை உறுதி செய்து கொண்டு மீட்பு பணிக்கு தயாராக வேண்டும். எப்போதும் போல்  பாப்புலர் ப்ரண்ட்டின் தன்னார்வலர்கள் பேரிடர் களத்தில் உதவ தயாராக இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம்.

Related Stories: