திருச்சியில் பரபரப்பு அதிமுக நிர்வாகி வீட்டில் பதுக்கிய 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: வாலிபர் அதிரடி கைது

திருச்சி: மதுரை அன்னப்பாறை பகுதியை சேர்ந்தவர் முத்துமணி(25). இவர் காரைக்கால் பகுதியில் பன்றிகளை பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி மற்றும் அவருடன் 10 பேர் மதுரையில் இருந்து திருச்சி வழியாக காரைக்காலுக்கு பன்றிகள் பிடிப்பதற்காக வலைகளுடன் வேனில் வந்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்திவிட்டு அவர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி கயல்விழிசேகர் மகன் முத்துக்குமார் தனது நண்பர்களுடன் அங்கு வந்து வேனில் இருந்த வலைகளை திருடி சென்றனர்.

இதுகுறித்து முத்துமணி அரியமங்கலம் போலீசில் நேற்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் நேற்று காலை முத்துக்குமார் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருடு போன வலைகள் மற்றும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரளாவிற்கு பன்றி ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பார்வதி தரப்பினரை தீர்த்து கட்ட நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார்  4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

Related Stories: