திருப்பூர் அருகே பஸ் மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி

திருப்பூர்: திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று மாலை  தனியார் பஸ்  சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதேசமயம் தாராபுரத்தில் இருந்து திருப்பூருக்கு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. ஊதியூர் அருகே கொடுவாய் பகுதியில் அந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவர் மீது இடித்து தூக்கி வீசப்பட்டு மறுபுறம் வந்த தனியார் பஸ் மீது மோதியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில், காரில் இருந்த கோவையை சேர்ந்த மகேஷ்குமார் (34), கிஷோர்குமார் (35) சூலூரை சேர்ந்த வீரக்குமார் (32), முருகேசன் (31), சுஜித் (33), வெற்றி செல்வம் (38) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் வீரக்குமார், முருகேசன், சுஜித், வெற்றி செல்வம் ஆகிய 4 பேர் பலியாகினர். மற்ற 2 பேரும் பஸ்சில் பயணம் செய்த 10 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: