×

ரூ.31 கோடியில் இரண்டு ஆர்டிஓ அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.30 கோடியே 73 லட்சத்து 62 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 12  லட்சத்து 24 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடக்கு) வருவாய்  கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில்  ரூ.2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய்  கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் ரூ.4 கோடியே 25 லட்சத்து 53 ஆயிரம் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், கல்வராயன்மலையில் ரூ.4 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் கட்டிடங்கள், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் ரூ.2 கோடியே 75 லட்சத்து 24 ஆயிரம் செலவிலும், ஏரலில் ரூ.3 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் செலவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் செலவிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் செலவிலும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.30 கோடியே 73 லட்சத்து 62 ஆயிரம்  செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : RTO ,Chief Minister ,M.K.Stalin , Two RTO office buildings at a cost of Rs 31 crore: Chief Minister M.K.Stalin inaugurated
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...