×

யங் இந்தியா அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத் துறை விசாரணை: 8 மணி நேரம் நடந்தது

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, நேற்று முன்தினம் ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தது. இந்நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அமலாக்கத் துறை நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த அவர், அமலாக்கத் துறை நடவடிக்கை கண்டித்து பேசியபோது, ‘சட்டத்தை புறக்கணிக்க மாட்டேன், சட்டத்தை மதித்து பின்பற்றுவேன்’ என கூறிவிட்டு நண்பகல் 12.20 மணிக்கு அங்கிருந்து சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘யங் இந்தியா’ அலுவலகத்துக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணையும் நடத்தினர். 8 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் விசாரணை நடந்தது.


Tags : Enforcement Department ,Mallikarjuna Kharge ,Young India , Enforcement Department interrogation of Mallikarjuna Kharge at Young India office: 8 hours
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...