ஹெல்மெட் அணியவில்லை பாஜ எம்பி.க்கு ரூ.20,000 பைன்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் தேசியக்கொடி ஏந்தி நடந்த பைக் பேரணியில் பாஜ எம்பி மனோஜ் திவாரி ஹெல்மெட் அணியாததால் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் தேசியக்கொடி ஏந்தி பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியில் பல்வேறு கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பாஜ எம்பி மனோஜ் திவாரி, ஹெல்மெட் அணியவில்லை. அவருக்கு டெல்லி போக்குவரத்து போலீசார் நேற்று அபராதம் விதித்தனர். ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாததால் வாகன உரிமையாளருக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக எம்பி மனோஜ் திவாரி டிவிட்டர் பதிவில், ‘ஹெல்மெட் அணியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போக்குவரத்து போலீசார் விதித்த அபராதத்தை நான் செலுத்துகிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: