×

1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணி காலி

புதுடெல்லி: நாடு முழுவதும் 1,472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், ‘பஸ்வான் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐஏஎஸ் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கையை 180 ஆக அரசு உயர்த்தி உள்ளது. இதை மேலும் அதிகரித்தால் ஐஏஎஸ் பயிற்சி தரம் குறைவதோடு, அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  2020 முதல் நேரடியாக தேர்வு செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி  பல்வேறு மாநிலங்களில் 1,472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : 1472 IAS, 864 IPS Job Vacancy
× RELATED ஹேமமாலினி குறித்து பேசிய காங்.கின் சுர்ஜேவாலாவுக்கு 48 மணி நேர பிரசார தடை