துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது: எம்பி.க்களுக்கு ஆல்வா அழைப்பு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய  ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. நாடாளுமன்றத்தில் நடக்கும் இத்தேர்தலில் இரு அவைகளையும் சேர்ந்த எம்பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். பாஜ கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்காரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. இந்நிலையில், மார்கரெட் ஆல்வா நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ‘எனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஒவ்வொரு எம்பி.க்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்கபாடுபடுவேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: