1200 ஆண்டுகள் பழமையானது பாக்.கில் வழிபாட்டுக்கு இந்து கோயில் திறப்பு

லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் அனார்கலி பஜார் அருகே உள்ள கிருஷ்ணர் கோயிலை ஒட்டியுள்ள வால்மீகி கோயில், கடந்த 20 ஆண்டுகளாக, இந்துக்களாக மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.  இவர்கள் வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்களை மட்டுமே, இந்த கோயிலில் வழிபட அனுமதித்து வந்தனர். இந்த விவகாரம் வெளிநாடு அறக்கட்டளை சொத்து வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வாரிய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால், 20 ஆண்டுகளுக்கு பிறகு 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த  அக்குடும்பத்திடம் இருந்து உடனடியாக மீட்கப்பட்டது.நேற்று முன்தினம் பக்தர்கள் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கபட்டது. இந்துக்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இதில் திரண்டு வழிபாடு நடத்தினர்.

Related Stories: