போக்குவரத்து கழக நிலையாணையில் திருத்தம் செய்ய குழு அமைப்பு: அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம், 4ம் கட்ட பேச்சுவார்த்தை 12.5.2022ல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. அப்போது, நடைமுறையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 37 நிலையாணைகளை எதிர்த்து தொழிற்சங்கத்தினரால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் முதன்மை தொழிலாளர் நீதிமன்றம் 1.4.2022 அன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி நீதிமன்றம் இரண்டு சரத்துகள் ஒன்றில் அறிவுறுத்தலும், மற்றொன்றில் நீக்கலும் செய்து உத்தரவிடப்பட்டது. தொழிற் இடமாற்றம் நீக்கப்பட்டது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை, போக்குவரத்து கழக வழக்கறிஞர் ஆராய்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பொதுவான நிலையாணையை வரும் காலங்களில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பொதுவான நிலையாணையை மாற்றம் செய்வது தொடர்பாக நிர்வாக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் நடைமுறையில் உள்ள பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்வதற்கான போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

Related Stories: