கால்நடை மருத்துவ கல்லூரி விடுதி நிர்வாகிகள் தகவலால் விபரீதம்; 2 கல்லூரி மாணவிகள் ‘மெர்குரி சல்பைட்’ ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிகள் 2 பேர் மெர்குரி சல்பைட் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேப்பேரியில், அரசு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு, மதுரை கருப்பாயூரணி அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்த 19 வயது மாணவி மற்றும் ஆற்காடு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஆகியோர் 2ம் ஆண்டு கால்நடை மருத்துவம் படிக்கின்றனர். இவர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியின் அறை எண் 31 மற்றும் 40 தங்கியுள்ளனர். நெருங்கிய தோழிகளான இருவரும், கடந்த வாரம் விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்று நள்ளிரவில் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த விடுதி வார்டன்கள் கலைச்செல்வி மற்றும் குமரவேல் ஆகியோர் இரவு நேரம் தாமதமாக வந்த 2 மாணவிகளை நேரில் அழைத்து கண்டித்துள்ளனர். மேலும், மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தகவல் ெதரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாணவியின் பெற்றோர் தங்களது மகள்களை கடுமையாக கண்டித்துள்ளனர். அதோடு இல்லாமல், விடுதி அறையில் தங்கியுள்ள சக மாணவிகள் மற்றும் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களும் 2 மாணவிகளிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 2 மாணவிகளும் கல்லூரி ஆய்வகத்தில் இருந்து ‘மெர்குரி சல்பைடு’ அமிலத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து, குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

விடுதி அறையில் 2 மாணவிகளும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே 2 மாணவிகளை மீட்டு சக மாணவி ஒருவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு 2 மாணவிகளும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேப்பேரி போலீசார் தற்கொலைக்கு முயன்ற மாணவிகளின் அறையை சோதனை செய்தனர். மாணவிகள் தற்கொலை முயற்சிக்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறனர். மேலும், 2 கால் நடை மருத்துவ மாணவிகள் தற்கொலை முயற்சி குறித்து கல்லூரியின் விடுதி வார்டன் மற்றும் விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: