×

அனைத்து மாநிலங்களும் ஏற்ற பிறகே பிராண்டட் உணவு பொருட்களுக்கு வரி: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ பாஜ தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: பிராண்டட் உணவு பொருட்கள் மீது வரி விதிப்பு தொடர்பாக பல பொய்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமீபத்தில் உணவு பொருட்கள் மீது, குறிப்பாக பிராண்டட் பொருட்கள் மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அதற்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து இருந்தார். ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரையும் ஏகமனதாக ஏற்ற பிறகே பிராண்டட் பொருட்களுக்கு வரி அமலானது என்றும் தெரிவித்து இருந்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்: பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ 8 இந்திய மீனவர்கள் ஓமனில் சிக்கி தவிக்கின்றனர்.கன்னியாகுமரியைச் சேர்ந்த 8 மீனவர்களும் 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கான விசாவில் ஓமன் சென்றனர். அவர்களுக்கு முதல் மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் இந்தியா திரும்ப விரும்புகின்றனர். எனவே இந்த 8 மீனவர்களையும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் சம்பள பாக்கியை வழங்கவும் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Tax on branded food items to be adopted by all states: Annamalai interview
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...