டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த மாணவிக்கு தங்கப்பதக்கம்

சென்னை: மருத்துவ அறிவியல்கள் தேர்வுகளுக்கான தேசிய வாரியத்தின் 21வது பட்டமளிப்பு விழா  டெல்லியில் சமீபத்தில்  நடைபெற்றது.  இதில், சென்னை அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறையைச் சேர்ந்த டிப்ளமேட் ஆஃப் நேஷனல் போர்டு கல்வித் திட்டத்தின் பயின்று சிறப்பான செயல்திறனை கல்வியில் நிரூபித்திருப்பதற்காக டாக்டர். ஜெயந்திக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மாணவியும், இரு குழந்தைகளின் அம்மாவுமான டாக்டர். ஜெயந்தி 2017ம் ஆண்டில் அகர்வால் கண் மருத்துவமனையில் (கண் மருத்துவவியலில் - தேசிய போர்டு) கல்வித் திட்டத்தில் சேர்ந்து 2020ம் ஆண்டில் வெற்றிகரமாக அதை நிறைவு செய்தார்.

தற்போது சென்னையில் அமைந்துள்ள டாக்டர். அகர்வால்ஸ் உயர்நேர்த்தி மையத்தில் மருத்துவ ரீதியிலான கருவிழி பெல்லோஷிப் உயர்கல்வி திட்டத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கல்விசார் பிரிவின் இயக்குனர் டாக்டர். பிரீத்தி நவீன் கூறியதாவது: கொரோனா பரவல் மற்றும் இரு இளம் குழந்தைகளின் அன்னைக்கான பொறுப்புகளையும் சுமந்து கொண்டு சாதனை படைத்திருக்கிறார்.  எங்களின் கல்விசார் முனைப்புத்திட்டங்கள் வழியாக மக்களுக்குப் பயன்தரும் கல்வியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் இத்தகைய சாதனையாளர்களை இன்னும் சிறப்பாக வழிநடத்துவதை எங்கள் பொறுப்பாக நினைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: