×

தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த ஜூலையில் இயல்பான அளவை விட 101% கூடுதல் மழை பொழிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த ஜூலை மாதத்தில் இயல்பான அளவை விட 101% கூடுதல் மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் இயல்பைவிட 408 சதவீதம் கூடுதலாக மழை பொழிந்தது. மதுரை 231 சதவீதம், நீலகிரி 231 சதவீதம், ராமநாதபுரம் 209 சதவீதம், திருப்பூர் 181 சதவீதம், பெரம்பலூர் 166 சதவீதம், திருவாரூர் 158 சதவீதம் கூடுதல் மழை பொழிந்துள்ளது.

தூத்துக்குடி 153 சதவீதம், கோவை 145 சதவீதம், கடலூர் 138 சதவீதம், தஞ்சை 131 சதவீதம், விருதுநகர் 130 சதவீதம், மயிலாடுதுறை 128 சதவீதம் அளவு கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல் சிவகங்கை 167 சதவீதம், திண்டுக்கல் 134 சதவீதம், நெல்லை 87 சதவீதம், திருப்பத்தூர் 60 சதவீதம், தென்காசி 45 சதவீதம், கள்ளக்குறிச்சி 39 சதவீதம் மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மிக குறைந்தபட்சமாக சென்னையில் கடந்த மாதம் இயல்பைவிட 22 சதவீதம் குறைவாக மழை பதிவானது.

காஞ்சிபுரத்தில் இயல்பைவிட 3 சதவீதம் குறைவான மழை பொழிந்துள்ளது; குமரி, வேலூரில் தலா 35 சதவீதம் குறைவாக மழை பெய்தது. சேலம் 167 சதவீதம், அரியலூர் 96 சதவீதம், ஈரோடு 85 சதவீதம், தருமபுரி 84 சதவீதம், ராணிப்பேட்டை 60 சதவீதம், திருச்சி 50 சதவீதம் கூடுதல் மழை பொழிந்துள்ளது. திருவள்ளூர் 40 சதவீதம், விழுப்புரம் 2 சதவீதம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 61 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட 97 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai Meteorological Inspection Centre , Tamil Nadu, Puducherry, July, 101% extra rain, Meteorological Centre
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...