குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்மழை: அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

நீலகிரி: குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்மழை காரணமாக மழைப்பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழையால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் மலைப்பாதைகள் வழியாக அருவிகளாக பயனித்து பவானி அணையை அடைகிறது. குறிப்பாக குன்னூர் பள்ளத்தாக்கு பகுதிகளில்  லாஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

அதைபோல காட்டேரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்மழை காரணமாக குன்னூர்மேட்டுப்பாலம் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி பயனித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. அதைப்போல குன்னூர் பள்ளத்தாக்கு பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ள நிலையில் அங்கு பெய்து வரும் மழை காண்போரை வெகுமாக கவர்ந்து வருகிறது.

Related Stories: