ஈரோடு மாவட்டம் பவானியில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது: காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீரால் காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே இரு கரையையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததற்கு அடுத்து கர்நாடகாவில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பி உபரி நீரானது தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வெளியாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையானது தனது முழுகொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுவருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் 50,000 கனஅடி உபரிநீரானது, தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 1லட்சம் கனஅடி அளவிற்கு வெளியேற்றப்பட்டது. இன்று மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரியாற்றில் வெல்ல பேருக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு காவிரி கரைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி ஆறும், பவானி ஆறும் சங்கமிக்க கூடிய பவானி கூடுதுறையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றைய தினமே அவர்கள் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பவானியில் பிரசிபெற்ற பரிகார ஸ்தலம் ஆனது மூடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கூட ஆடி 18-ஐ முன்னிட்டு காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. பவனி நகரையும், குமாரபாளையத்தையும் இணைக்க கூடிய பழைய காவிரி பாலத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரு நகர்ப்பகுதிகளுக்கும் செல்ல கூடிய பொதுமக்கள் கோவை செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலை வழியாக 3 கி.மீ. சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.

Related Stories: