×

ஊட்டி-மஞ்சூர் சாலையில் டேபிஸ் டாப் வேகத்தடைகள்

ஊட்டி: ஊட்டி - மஞ்சூர் சாலையில் விபத்துக்களை தவிர்க்க 8 இடங்களில் டேபிஸ் டாப் வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சாலைகள் பெரும்பாலும் குறுகிய சாலைகளாகவும், அதிகள வளைவுகளை கொண்டதாகவும் காணப்படும். இதனால் சாலை விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சாலை விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்படுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளிலும், சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், விபத்துக்கள் ஏற்பட்டாலும், வாகனங்கள் சாலைகளை விட்டு வெளியே செல்லாமல் தவிர்க்கப்படுகிறது.

பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்களை வேகத்தை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விபத்துக்களை குறைக்க மாவட்டத்தில் பல்வேறு சாலைகளிலும் டேபிள் டாப் எனப்படும் வேகத் தடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டி - மஞ்சூர் சாலையில் தற்போது 8 இடங்களில் இது போன்ற டேபிஸ் டாப் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி அருகேயுள்ள சவுக்கு மரம் பகுதியில் 2 வேகத் தடைகளும், லாரன்ஸ் பள்ளி செல்லும் பகுதியில் 2 இடங்களிலும், முத்தோரை பகுதியில் 2 இடங்களிலும், எமரால்டு பகுதியல் இரு இடங்கள் என 8 இடங்களில் தற்போது இந்த வேகத் தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இச்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ooti-Manjur Road , On Ooty-Manjoor Road Tapis top speed bumps
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்