தளராத தன்னம்பிக்கை பயணம்!: ஆகாயத்தை நோக்கிய இளம் விஞ்ஞானியின் ராக்கெட் கனவு..ஆராய்ச்சிக்கு பெரிய அறையை ஒதுக்கிய மணிப்பூர் கல்லூரி..!!

இம்பால்: வீட்டுக்குளேயே உருவாகும் திட்டத்துக்கு பெயரோ கூட்டு புழு. இதன் நாயகனோ 19 வயது இளைஞன். 5 ஆண்டு முயற்சிகள் தெரிய வர ஜஸ்டிஸ் என்ற பெயரை ராக்கெட் மனிதன் என மாற்றிவிட்டனர். பேனாவால் வரைந்த திட்ட மாதிரி வரைபடங்கள், பிளாஸ்டிக் குழாயால் செய்யப்பட்ட ஏவுகலன், சமயலறைலேயே சகோதரிகள் இருவரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், மொய்ராங்கில் படிக்கும் கல்லூரி மைதானமே ஏவுதளம், ஒட்டு பலகையும், இரும்பு தகடுமே ராக்கெட் நிலைநிறுத்த மேடை. 500 மீட்டர் என்ற இலக்கு பிசகி ஏவுகலன் கீழே விழுந்தாலும் என்ன.

கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்று உலக பொதுமறை சொல்கிறதே. பாதுகாப்பாக கீழே இறங்க பாராசூட் இருந்தாலும், எரிபொருளை நேரடியாக பற்ற வைத்ததால் ராக்கெட்டின் முனை வெடித்ததே தோல்விக்கு காரணம். தொலைவில் இருந்து இயக்கும் கருவி வாங்க நிதி இல்லாததால் மின்கலம், மின்வடம் போதும் என்று முயற்சியை தொடர்கிறார் இந்த ராக்கெட் மனிதன். இளங்கலை அறிவியல் 2ம் ஆண்டு படிக்கும் இளம் விஞ்ஞானிக்கு பெரிய கல்வி நிறுவனங்கள், உரிய அமைப்புகளிடம் இருந்து இதுவரை நீளவில்லை ஆதரவுக்கரம்.

படிக்கும் கல்லூரி நிர்வாகம் ஒரு பெரிய அறையை ஆராய்ச்சி தலமாக பயன்படுத்த வழங்கியிருப்பதும், ஆசிரியர்களின் ஊக்கமுமே உதவிக்கரம். காய்கறி விற்கும் தாய் லஞ்சனா. கூலி வேளைக்கு செல்லும் தந்தை தயா மற்றும் இரு சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் தார்மீக ஆதரவுடன் தொடர்கிறது ஆகாய பிரவேசத்திற்கான அவரது முயற்சி.

Related Stories: