ஆவடி, நெமிலிச்சேரியில் 2 அரசு பள்ளிக்கு எழுதுபலகை, குடிநீர் இயந்திரம்

ஆவடி: ஆவடி, நெமிலிச்சேரியில் இயங்கி வரும் 2 அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எழுதுபலகை, மின்சாதனங்கள் மற்றும் ஆர்ஓ குடிநீர் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் பாங்க் ஆப் பரோடா வங்கியின் 115வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் ஆவடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையிலும் துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து ஆவடி, காமராஜர் நகரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நெமிலிச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எழுதுபலகை, பேன் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் மற்றும் ஆர்ஓ குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை வங்கி கிளை மேலாளர் கர்யம் முரளி சேகர் வழங்கினார். மேலும், ரத்ததானம் வழங்கப்பட்டது. அரிமா சங்க மண்டல தலைவர் எஸ்.தங்கராஜ், ஆவடி தலைவர் பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் சதீஷ் கோவர்த்தனன், திருவேங்கடம், குருமூர்த்தி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: