கடந்த ஆண்டு ஜூலையை விட 2022 ஜூலையில் வாகன விற்பனை 8% சரிவு: டீலர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: கடந்த ஆண்டு ஜூலையை விட 2022 ஜூலையில் வாகன விற்பனை 8 சதவீதம் சரிந்துள்ளதாக டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், டிராக்டர்கள் விற்பனை கடந்த மாதம் குறைந்ததாக டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அனைத்து வகை வாகனங்களின் விற்பனை 2021 ஜூலையில் 15,59,106-ஆக இருந்தது. இந்த ஆண்டு ஜூலையில் கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை 14,36,927 - ஆக குறைந்துள்ளது. கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட பயணி வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு ஜூலையில் 5 சதவீதம் சரிந்துள்ளது.

2021 ஜூலையில் 2,63,238 ஆக இருந்த கார்கள், பேருந்துகள் விற்பனை 2022 ஜூலையில் 2,50,972 ஆக குறைந்துள்ளது. 2021 ஜூலையில் 11,33,344-ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் விற்பனை இவ்வாண்டு ஜூலையில் 10,09,574-ஆக சரிந்திருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு ஜூலையில் 82,419-ஆக இருந்த டிராக்டர் விற்பனை 2022 ஜூலையில் 28 சதவீதம் சரிந்து 59,573-ஆக உள்ளது. அதே நேரத்தில் 2021 ஜூலையில் 27,908-ஆக இருந்த 3 சக்கர வாகன விற்பனை இவ்வாண்டு ஜூலையில் 80 சதவீதம் அதிகரித்து 50,349-ஆக உள்ளது. லாரிகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் விற்பனை 2021 ஜூலையை விட 27 சதவீதம் உயர்ந்து 66,459 ஆக இருக்கிறது.

Related Stories: