×

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டதாக ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தகவல்

சென்னை: கடந்த 1996-97-ம் ஆண்டு செல்வ வரி தாக்கல் செய்யவில்லை என்று சசிகலாவுக்கு எதிராக வருமானவரி துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்க்கு 2001-ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் அளித்த பதிலின் அடிப்படையில் சசிகலாவுக்கு அந்த குறிப்பிட்ட ஆண்டில் ரூ.4,97,52,100 மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாகவும் இந்த சொத்துக்களுக்கு ரூ.10,13,000 வாரியாக செலுத்தவேண்டும் எனவும் வருமானவரித்துறை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட வருமானவரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு அதனை மறுமதிப்பீடு செய்யவேண்டும் எனவும், ரூ.40 லட்சம் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை தரப்பில் 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் முன்பு விசரணைக்கு வந்தபோது வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே வருமான வரித்துறையில் ரூ.1 கோடிக்கும் குறைவான வழக்குகளை கைவிடுவது என்று நேரடி வரிகள் வாரியம் சுற்றைக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றைக்கையின் அடிப்படையில் இந்த வழக்குகளை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வருமான வரித்துறை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை முடித்து உத்தரவிட்டனர். 


Tags : Department of Revenue ,iCordt ,Sasigala , Sasikala, Wealth Tax Case, ICourt, Income Tax Department
× RELATED வருவாய் மற்றும் பேரிடர்...