×

தைவானை கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி: தென் சீனக் கடலில் தொடர்ந்து பதற்றம்

தைபே: தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றதை கண்டிக்கும் வகையில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறி வருகிறது. இந்நிலையில்தான் சீனாவின் எதிர்பபையும் மீறி தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி சென்றுள்ளார். இதனை காரணமாக வைத்து சீனா, தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் நேற்று நான்சி பெலுசி தைவான் வைபே நகருக்கு சென்றபோது சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்தன. இது சீனாவின் போர் முன்னோட்டம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டது. தைவானை சுற்றி வளைத்து நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் நடவடிக்கை பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாக ஜி 7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து, தைவானை சுற்றியுள்ள கடல் பகுதி முழுவதிலும் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தும் பயிற்சியை சீனா மேற்கொண்டுள்ளது. தைவான் தனி நாடாக இருந்தபோதிலும்  சீனா தனது நாட்டின் ஒருபகுதி என்று உரிமை கொண்டாடி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீனக் கடலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தைவான் மீது சீனா போர் தொடுத்தால் அது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடங்க வைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Taiwan ,South China Sea , Taiwan maritime border, missile launch, Chinese military exercises
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...