போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனை காண்போம், தலைவர் அலுவலகம், போக்குவரத்துத் துறை தனது குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம், 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை 12.05.2022 அன்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணை (Common Standing Order) ஏற்படுத்திட ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நடைமுறையில் உள்ள. 05.09.1995-ல் அங்கீகரிப்பட்ட 37 நிலையாணைகளை எதிர்த்து தொழிற்ச்சங்கத்தினரால் தொடரப்பட்ட மேல்முறையிட்டு வழக்கில் முதன்மை தொழிலாளர் நீதிமன்றம் 01.04.2022-ல் அன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி நீதிமன்றம் இரண்டு ஷரத்துகள் ஒன்றில் அறிவுறுத்தலும் மற்றொன்றில் நீக்கலும் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஷரத்து (36) தமிழ் மற்றும் ஆங்கிலம் நிலையாணை நகல்கள் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் வழங்கப் பட வேண்டும். (அறிவுறுத்தப்பட்டது)

* ஷரத்து (28) தொழிற் இட மாற்றம் நீக்கப்பட்டது)

2. நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை, போக்குவரத்துக் கழக வழக்கறிஞர் ஆராய்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணையை வரும் காலங்களில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். மேற்கண்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் பொதுவான நிலையாணையை மாற்றம் செய்வது (Amendment) தொடர்பாக நிர்வாக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய கேட்டுக்கொண்டுள்ளார்.

3. மேற்கண்ட சூழ்நிலையில், தலைவர் அலுவலகத்தின் குறிப்பினை நன்கு ஆய்வுசெய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறையில் உள்ள பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்வதற்காக போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து அரசு இதன் வழி ஆணையிடுகிறது.

I. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள்:

1) உறுப்பினர்-செயலாளர் மற்றும் கூட்டுநர் / மேலாண் இயக்குநர், 14-வது ஊதிய ஒப்பந்தக்குழு, மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை.

2) மேலாண் இயக்குநர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை.

3) மேலாண் இயக்குநர், சாலை போக்குவரத்துக் கழகம், சென்னை.

4) தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை. 5) முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு), தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம், கும்பகோணம்.

II. தொழிற்சங்க பிரதிநிதிகள்:

1) தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை (LPF)

2) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் (CITU)

3) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் (TTSF)

4. மேற்கண்ட இக்குழு பொதுவான நிலையாணையில் அடிப்படை ஷரத்துக்களில் மாற்றம் செய்யாமல். ஒரே மாதிரியான நிலையாணை (uniform Standing Order) தயார் செய்து அளிக்குமாறு அரசு ஆணையிடுகிறது. என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: