×

தைவானை சுற்றி வளைக்கும் சீன போர் விமானங்கள்!: பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாக ஜி7 நாடுகள் கண்டனம்..!!

பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறி வருகிறது. இந்நிலையில்தான் சீனாவின் எதிர்பபையும் மீறி தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி சென்றுள்ளார். இதனை காரணமாக வைத்து சீனா, தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் நேற்று நான்சி பெலுசி தைவான் வைபே நகருக்கு சென்றபோது சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்தன. இது சீனாவின் போர் முன்னோட்டம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானை சுற்றி வளைத்து நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் நடவடிக்கை பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாக ஜி 7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தைவான் மீது சீனா போர் தொடுத்தால் அது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடங்க வைக்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Tags : Taiwan ,G7 , Taiwan, Chinese warplanes, regional peace, G7 countries
× RELATED தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...