×

சென்னையில் இனி ஒவ்வொரு வாரமும் தூர்வாரும் பணிகள் நடைபெறும் : குடிநீர் வாரியம்

சென்னை : சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 1,425 தெருக்களில் 7,345 இயந்திர நுழைவாயில்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 1,99,329 பிரதான கழிவுநீர் குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளது.தூர்வாரும் பணிகள், இனி ஒவ்வொரு வாரமும் இனி மேற்கொள்ளப்பட உள்ளன என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில்உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் 21.07.2022 முதல் 3007-2022 வரை நடைபெற்றதில்முடிக்கப்பட்ட பணிகளின் விவரங்கள் சென்னை குடிநீர் வாரியம் தகவல்
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பகுதி அலுவலகம்-1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் கடந்த வாரம் 21.07.2022 முதல் 30.07.2022 வரை நடைபெற்றது.

1460 தெருக்களில் உள்ள 8578 இயந்திர நுழைவாயில்களில் 2,40,554 மீட்டர் நீளத்திற்கான கழிவுநீர் பிரதான குழாய்களில் 1425 தெருக்களில் உள்ள 7345 இயந்திர நுழைவாயில்களில் 1,99,329 மீட்டர் நீளத்திற்கான கழிவுநீர் பிரதான குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் 21.07.2022 முதல் 30.07.2022 வரை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மேற்கொள்ளப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Drinking Water Board , Drainage Works, Drinking Water Board, Chennai
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...