×

இந்தியாவில் முதல்முறையாக பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று... நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!!

டெல்லி :டெல்லியில் நேற்று மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியானதால், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.  திருச்சூரில்  ஒரு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்தார். இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே கேரளா, டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஆவார். வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லாத நிலையில் அப்பெண் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காய்ச்சல், தோல் புண்கள் உள்ளன. அவரின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளளார்.

குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிய சுகாதாரத்  துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வலியுறுத்தினார். மேலும், இந்நோய் பரவலை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை குழுவையும் அமைத்துள்ளார்.


Tags : India , India, monkey measles, infection
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...