பாதுகாப்பு அச்சுறுத்தல் 348 செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 348 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மக்களவையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட செயலிகள் குறித்த கேள்விக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து கூறிய போது, `உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 348 செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இந்தியாவில் செயல்படுவதற்கு ஒன்றிய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை தடை விதித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. அதே நேரம், எப்போது முதல் இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து இந்த அமைச்சகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Stories: