×

தாய்லாந்து துபாய்க்கு, சிங்கப்பூர் விமானத்தில் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் பறிமுதல்: சென்னையில் 5 பேர் கைது

சென்னை: தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் மும்பையை சேர்ந்த யூசுப் அப்துல்ரகுமான் (32), சென்னையை சேர்ந்த சங்கர் நாகராஜன் (30), முகமது அலி (32), ஜமால் முகமது (24), ஆகியோர் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று திரும்பினர். சோதனையில் உடமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48.56 லட்சம் மதிப்புடைய 95.37 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி கட்டிகள் மற்றும் ₹15.19 லட்சம் மதிப்புடைய 343 கிராம் தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏர்வேஸ் விமானம் புறப்பட்ட தயாரானது.

இந்த விமானத்தில்  சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில்  சென்னையை சேர்ந்த சலீம் (34),  தன் சூட்கேசில் சவுதி ரியால் கரன்சியை மறைத்து வைத்திருந்தார். அதன் இந்திய மதிப்பு ₹24.37 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து சலீமை கைது செய்தனர். ஒரே நாளில் ₹ 88.12 லட்சம் மதிப்புடைய தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, மும்பை பயணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் விமான  கழிவறையில் தங்கக்கட்டி : இதேபோல் சிங்கப்பூரில் வந்த  இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை  விமான ஊழியர்கள்,  சுத்தப்படுத்தினர். அப்போது விமான கழிவறைக்குள் ஒரு பார்சலில் 1 கிலோ எடை உடைய தங்க கட்டி  இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு  ரூபாய் 46.13 லட்சம். சுங்க அதிகாரிகள் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய, கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags : Singapore ,Thailand ,Dubai ,Chennai , Gold, silver, foreign currency seized on Singapore flight from Thailand to Dubai: 5 people arrested in Chennai
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...