திமுக உட்கட்சி தேர்தல்: ராயபுரம் பகுதி 48வது வட்ட செயலாளர், நிர்வாகிகள் தேர்வு

தண்டையார்பேட்டை: திமுக உட்கட்சி தேர்தலில், வடசென்னை ராயபுரம் 48வது வட்ட திமுக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாவட்டத்திற்கு திமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆணையாளர்களை திமுக தலைமை அறிவித்தது. சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட 48, 48அ, 49, 49அ, 50, 50அ, 51, 51அ, 52, 52அ, 53, 53அ ஆகிய வார்டுகளுக்கு போட்டியிட்ட வட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கான தேர்தல்  ராயபுரம் அறிவகத்தில் நேற்று நடந்தது. சென்னை வடக்கு மாவட்டத்திற்கு திமுக தலைமை அறிவித்த ஆணையாளர் ஆஸ்டின் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், பகுதி செயலாளர்கள் வ.பே. சுரேஷ், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

இதில், ராயபுரம் மேற்கு பகுதி 48வது வட்டத்திற்கு ஒரே அணி மட்டுமே மனுதாக்கல் செய்து இருந்தது. அதன்படி, இரா.பாலன் வட்டசெயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவருடன் துணை செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 21 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மற்ற வட்டங்களுக்கு போட்டி போடுபவர்கள் கலந்து பேசி ஒரு அணியாக வாருங்கள் என தெரிவிக்கப்பட்டது. எனவே, மற்ற வட்டங்களுக்கு நிர்வாகிகள் கலந்து பேசி நியமிக்கப்படுவார்கள். இன்று ஆர்.கே. நகருக்கும், நாளை பெரம்பூர் பகுதிக்கும் தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

Related Stories: