பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கம்: வெண்கலம் வென்றார் லவ்பிரீத் சிங்

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் பளுதூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 9வது பதக்கம் இது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த லவ்பிரீத் சிங் (24 வயது)  கப்பற்படையில் பணியாற்றி வருகிறார். இறுதிப் போட்டியில் நேற்று சிறப்பாக செயல்பட்ட அவர் ஸ்நாட்ச் முறையில் 163 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில்  192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை  தூக்கி 3வது இடம் பிடித்தார்.

அவர் வென்ற வெண்கலம், நடப்பு காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 9வது பதக்மாக அமைந்தது.  லவ்பிரீத்  சிங் ஏற்கனவே காமன் வெல்த் ஜூனியர் பளுதூக்குதலில் 2017ம் ஆண்டு தங்கம் வென்றுள்ளார். கேமரூன் வீரர்   ஜூனியர் பெரிக்ளக்ஸ்   மொத்தம் 361 கிலோ எடையை  தூக்கி (160 கி. + 201 கி.) தங்கப்பதக்கம் பெற்றார். சமாவோ நாட்டின்  ஜாக் ஒபெலோஜ் மொத்தமாக 358 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார் (164 கி. + 194 கி.). பளுதூக்குதலை குடும்பத் தொழிலாகவே! மேற்கொண்டு வரும் ஜாக் குடும்பத்து (10வது நபர் ஜாக்) கிடைத்த 8வது பதக்கம் இது.

Related Stories: