சின்னமனூர் சந்தையில் பீட்ரூட் விலை சரிவு: 60 கிலோ ரூ.700க்கு விற்பனை

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியை சுற்றியுள்ள அய்யம்பட்டி, புலிக்குத்தி, தர்மத்துப்பட்டி, சிந்தலச்சேரி, சங்கராபுரம், குச்சனூர், பொட்டிப்புரம், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, அய்யனார்புரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, சின்ராமகவுண்டன்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், முத்தலாபுரம் ஆகிய கிராமங்களில் 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகியகால சாகுபடி காய்கறிகளை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் பீட்ரூட் விலை அதிகரித்ததால், சின்னமனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அதிகளவில் பிட்ரூட்டை விவசாயம் செயதனர். இந்நிலையில் தற்ேபாது பீட்ரூட்டின் விலை குறைந்துள்ளது. 60 கிலோ எடை கொண்ட ஒரு மூடை 700 ரூபாயாக உள்ளது. எனவே அறுவடைக்கு வந்துள்ள பீட்ரூட்டை அறுவடை செய்து சின்னமனூர் ஏலச்சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் வரிசைப்படுத்தி வருகின்றனர். பீட்ரூட் விலை திடீர் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: