ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: 2-வது இடத்திற்கு முன்னேறினார் சூர்யகுமார் யாதவ்

துபாய்: ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.

டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து நீடிக்கிறார், 3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் உள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான அடுத்த டி20 போட்டிவரும் சனிக்கிழமை சென்ட்ரல் புரோவார்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Stories: