கஞ்சா கடத்தி செல்ல இலங்கையில் இருந்து வேதாரண்யம் வந்த 2 பேர் கைது

வேதாரண்யம்: கஞ்சா கடத்தி செல்ல இலங்கையில் இருந்து வேதாரண்யம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைகாடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் சுற்றுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுதலைக்காடு பகுதியில் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைவிடத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த ஜனார்த்தனன் (28), ஜெசிகரன் (21) என்பதும், இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த அமலதாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் 31ம் தேதி மதியம் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து வந்ததாகவும் இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வதற்காக வந்ததாகவும் தெரிவித்தனர். 2 பேரையும் கைது செய்து, இங்கிருந்து யார் கஞ்சா கடத்தி கொடுப்பது, அவர்கள் யார் என்று கடலோர காவல் படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: