ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா படங்களின் விளம்பரங்கள் வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நாசர் கூறினார். இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளது. இங்கு இருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டம் உள்ளது. தற்போது வாட்டர் பாட்டில் மற்றும் டேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் பாட்டில்களில் குடிநீர் தயாரிக்கப்பட உள்ளது.

அதேபோன்று அரசு விளம்பரங்கள் ஆவின் பால் பாக்ெகட்டுகளில் இடம் பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம்

லிட்டராக இருந்த நிலையில் தற்போது 28 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: