×

' Bye Bye Miss U ரம்மி': நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் ரூபாயை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், பி.காம் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டில் உள்ள சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான சுரேஷ், தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மியில் விளையாடியபோது சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். இதில் மனமுடைந்த சுரேஷ், ரம்மி விளையாட்டில் இருந்து மீள முடியவில்லை என்று கூறி Bye Bye Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடிதத்தில் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளேன் என்பதை தெளிவாக எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Namakkal , Namakkal, online rummy, graduate youth, suicide
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...