நெமிலி அருகே பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி :  நெமிலி அடுத்த வேட்டங்குளம் பகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டித்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த வேட்டாங்குளம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தின் மேல்தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து பழுதடைந்தது. ஆபத்தான நிலையில் உள்ள இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதையடுத்து, அதே பகுதியில் உள்ள மகளிர் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ஆனால் அதனை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளும்படி மகளிர் குழுவினர் தெரிவித்தார்களாம். எனவே, வேட்டாங்குளம் பகுதியில் பழுதாகியுள்ள அங்கன்வாடி மையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து சீரமைத்து குழந்தைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: