×

கார்ப்பரேட் நிறுவனத்தை விட திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனை சிறப்பாக உள்ளது-முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பெருமிதம்

திருமலை : கார்ப்பரேட் நிறுவனத்தை விட திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனை சிறப்பாக உள்ளது என்று மாஜி அறங்காவலர் குழு உறுப்பினர் சுதா நாராயணமூர்த்தி தெரிவித்தார்.திருப்பதி ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினருமான சுதா நாராயணமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை நிர்வாகத்தின்கீழ் உள்ள  ஐசியூ, ஜெனரல் வார்டுகள், ஆபரேஷன் தியேட்டர்களை பார்வையிட்டார்.

மேலும், பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இருந்து குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அவர் பேசுகையில், ‘ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமியின் ஆசிர்வாதத்துடன் எங்கு உள்ளாவர்களுக்கும் இலவச அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. இது தான் இந்தியாவின் சிறப்பு.

 மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த சேவையையுடன் மருத்துவமனையில்  நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் சேவைகள் சிறப்பாக உள்ளது.டாக்டர்கள்  மற்றும் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர்.  கார்ப்பரேட் நிறுவனத்தை விட மருத்துவமனை சிறப்பாக உள்ளது’ என்றார்.  பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து வந்த முகமது அபுல் கசன் கூறுகையில், ‘எனது 5 வயது மகள் பஹீபாவின் இதயத்தில் ஓட்டை இருக்கிறது. இதனால், கடுமையான உடல் நல பிரச்சினைகளை எதிர்கொள்ள இருக்கிறது. இதையடுத்து, சிறு குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்ய கூகுளில் தேடினோம்.

அப்போது, திருப்பதியில் இந்த மருத்துவமனை இருப்பதை அறிந்தோம். பிறகு மருத்துவமனை இயக்குநர் ஸ்ரீநாதரெட்டியை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு  குழந்தையின் மருத்துவ பதிவுகள் அனைத்தும் அவருக்கு அனுப்பினோம். அவற்றை பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்ய கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மருத்துவமனைக்கு வந்து அப்பாயின்ட்மென்ட் செய்தேன்.

கடந்த 29ம் தேதி குழந்தைக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்தனர். இங்குள்ள மருத்துவ சேவையும் சிறப்பாக உள்ளது’ என்றார். ஆய்வின்போது இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், மருத்துவமனை இயக்குநர் ஸ்ரீநாதரெட்டி, ஆர்எம்ஓ பாரத் ஆகியோர் உடனிருந்தனர்.

இருதய மாற்று அறுவை சிகிச்சை விரைவில் செய்யப்படும்

இதுகுறித்து  தலைமை செயல் அதிகாரி தர்மா பேசுகையில், ‘மருத்துவமனை திறக்கப்பட்ட 6  மாதங்களுக்குள் 500க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் இலவசமாக  செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வார வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கும்  வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. ₹20 முதல் ₹25 லட்சம்  செலவில் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகிறது. இதற்காக, சில  இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அவற்றை ஒருங்கிணைத்து பெற முயற்சி  செய்யப்படுகிறது’ என்றார்.

Tags : Tirupati Padmavati Children's Cardiac Hospital ,Purumitham , Tirumala: Tirupati Padmavathi Children's Cardiac Hospital is better than a corporate body, says ex-trustee
× RELATED வலுவான அரசு என்பதால் தான் இடஒதுக்கீடு...