×

விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட தற்காலத்தில் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுப்பது பொருத்தமில்லை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்வதற்கு தலைமைச் செயலாளர் தடை விதித்துள்ளார். தண்டோராவுக்கு பதிலாக ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி எச்சரிக்கை செய்ய தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட தற்காலத்தில்தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுப்பது பொருத்தமில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலைமை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக கொண்டு சேர்ப்பதற்கு இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதனை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனை படுவதை கண்டேன் எனவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழிநுட்பமும் பெருகிவிட்டது.

இந்த சூழ்நிலையில் தண்டோரா போடுவது இன்னும் தொடரவேண்டியது தேவையில்லை என்றும், ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வளம் வருவதன் மூலம் செய்திகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும் என என தலைமை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே தண்டோரா போடுவதற்கு கடுமையான தடை விதிப்பது நல்லது, தடையை மீறி தண்டோரா போடும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார். இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை சென்றடையும் வகையில் பரவலான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்துமாறு தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Tandora ,Chief Secretary ,District ,Collectors , A time when science has grown, warning through Dandora, Chief Secretary's letter to District Collectors
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி