×

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓ.பன்னிர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை...

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னிர்செல்வம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும்  வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் கட்சியின் பொது குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தனி தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு கடந்த 6, 7 தேதிகளில் நடைபெற்றது. பின்னர் 11 தேதி காலை 9 மணியளவில் அதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று அந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 11 தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் ஜூலை 11 தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும் 3 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என காலக்கெடு விதித்தது தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் , இந்த வழக்கு நாளை முதல் விசாரணைக்கு வரும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று அறிவித்திருந்தார். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அதிமுக பொதுக்குழுவை வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும் வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் ஜனநாயகத்துடன் பெருபான்மையான உறுப்பினர்கள் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும் எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கை பெற முடியாதவர்கள் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக ஓபிஎஸ்க்கு எதிராக சில கருத்துகள் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக தான் இந்த மனு தாக்கல் செய்துள்ளனர்.          


Tags : O. Panneerselvam ,High Court ,AIADMK , AIADMK, General Committee, Case, Judge, Change, Pannirselvam, Request
× RELATED அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த...